கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 154 கிராம் 267 மில்லிகிராம் ஹெரோயின், 81 கிராம் 485 மில்லிகிராம் ஐஸ், 840 மாத்திரைகள், 209 கிராம் மயக்க மருந்துகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 526 சந்தேக நபர்களில் 04 சந்தேகநபர்கள் தடுப்புக் கட்டளையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் புனர்வாழ்வு மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.