ரணில்-பசில்-மஹிந்த பேச்சுவார்த்தை?

நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் பேசசுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக உள்ளக தகவல்களை அடிப்படையாக கொண்டு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ அண்மையில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதனை தொடர்ந்து தேர்தல்கள் தொடர்பில் கட்சி அங்கத்தவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்களது ஆதரவோடே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். அதனை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சாராது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லாவன்ஸா தலைமையிலான ஒரு குழுவினர் ஏற்கனவே ஜனாதிபதிக்கான பரப்புரைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையிலேயே பசில் ராஜபக்ஷ தமது கட்சி விடயங்கள் தொடர்பில் அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்படவுள்ளார். அத்தோடுஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவுது மற்றும் இவை தொடர்பில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்கவுக்கு எதிர்காலத்தில் ஆதரவு வழங்குவது தொடர்பில் அவருடன் பசில் பேச்சுவார்த்தைகளை நடாத்தி முடிவு எடுக்க சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் மஹிந்த ராஜபக்ஷ்வும் கலந்து கொள்வார் என நம்பப்படுகிறது.

Social Share

Leave a Reply