தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல்மார்க்கமாக கடத்த முயன்ற 71 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் என்னம்கோட்டை இறால் பண்ணையில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பொது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது 950 கிலோ கிராம் நிறையுடைய கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.