சப்ரகமுவ மாகாணத்தில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலையில் இன்று (22) இருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு, மேல், சப்ரகமுவ, மத்திய,தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.