இலங்கையில் உள்ள தமிழ் பேசும் ஊடகங்களின் வரிசையில் தனக்கென தனி இடம் பிடித்த வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்கால நிலை தொடர்பிலும், அதன் எதிர்காலம் தொடர்பிலும் சுயாதீன ஊடக வலையமைப்பின் பிரதானி சுதர்சன குணவர்த்தனவிற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சுப்பையா ஆனந்தகுமாருக்கும் இடையில் இன்று(25) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியினால் சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தொழிற்சங்க ரீதியாக தீர்வு காண மூவர் கொண்ட விசேட குழுவின் உறுப்பினரன சுப்பையா ஆனந்தகுமார், தமிழ் பேசும் அரச ஊடகங்களின் நிகழ்கால போக்கு தொடர்பில் ஜனாதிபதி முழுமையாக அக்கறை கொண்டு செயற்படுகிறார் என்ற முறையில் வசந்தம் tv மற்றும் வசந்தம் Fm ஊடகங்களின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலம் தொடர்பில் இன்று நீண்ட கலந்துரையாடலை மேற்கொள்ள முடிந்ததாக சுப்பையா ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வசந்தம் நிகழ்ச்சி பிரிவில் புதிய பொறுப்பாளர் நியமனம், வசந்தம் செய்தி பிரிவின் தற்போதைய நிலை, செய்திகளின் நேரங்களின் ஏற்பட்டுள்ள மாற்றம், மதிய நேர செய்தி நிறுத்தப்பட்டமை உட்பட பல கேள்விகள், ஊடக பிரதானியிடம் எழுப்பப்பட்டது, அது தொடர்பில் அவரும் தெளிவான விளக்கத்தையும், அவரின் நிலைப்பாட்டையும் என்னிடம் விளக்கியுள்ளார்.
இதுவரை காலமும் SD முறையில் ஒளிப்பரப்பாகிய செய்திகள் தற்போது HD தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாகுவதாகவும் அதனாலே இரவு நேர பிரதான செய்தியில் மாற்றம் ஏற்பட்டதாகவும், மதிய நேர செய்தி நிறுத்தப்பட்டமைக்கான காரணமும் விளக்கி கூறப்பட்டுள்ளது.
அதன் பிறகு வசந்தம் தொலைக்காட்சியின் செய்தியின் முக்கியத்துவத்தை அவரிடம் ஆனந்தகுமார் எடுத்துரைத்த பொழுது அதனை புரிந்து கொண்ட பிரதானி மிக விரைவில் நிறுத்தப்பட்ட மதிய நேர செய்தியை வழமைப்போல் பகல் 12.55க்கு மீண்டும் ஒளிபரப்ப நான் ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதன் பிறகு வசந்தம் FM தொடர்பிலும் சூமூகமான கலந்துரையாடால் இடம்பெற்றதோடு , Fm செய்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், அங்கு காணப்படும் பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் என்று பிரதானி தெரிவித்ததோடு, வசந்தம் செய்தி பிரிவு தொடர்பாகவும் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு அவரால் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.
வசந்தம் tv தொடர்பிலும், செய்தி பிரிவில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பிலும் ஊழியர்களுடன் நேரடியாக தான் கலந்துரையாடவுள்ளதாகவும் அதன் பிறகு மேலதிக விடயங்கள் மாற்றங்கள் தொடர்பில் மீண்டும் பேசுவதாகவும் ஊடக பிரதானி சுதர்சன குணவர்த்தன எனக்கு உறுதியளித்தார்.
மக்கள் மத்தியில் சிறந்த பெயரையும் நன் மதிப்பையும் பெற்றுள்ள வசந்தம் தொலைக்காட்சி மீண்டும் புது பொலிவுடன், தரமான படைப்புக்களையும், தரமான செய்திகளையும் வழங்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய வளமான தேசம் உருவாக ஊடகங்களின் பங்கு என்பது இன்றிமையாதது, அதன் ஓர் கட்டாமகவே இன்று சுயாதீன ஊடக வலையமைப்பின் பிரதானியுடன் மேற்குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.