ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் 108 அடி சப்த தள இராஜகோபுர மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.
இதன்போது நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானும் பங்கேற்றிருந்தார்.
மேலும்,மகா கும்பாபிஷேகம் குறித்து அமைச்சர் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
“ஹட்டன் நகரப் பகுதியானது பல்லின சமூகமும் வாழும் சமாதான பூமியாகவே கருதப்படுகின்றது. இங்கு இவ்வாறானதொரு வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் அமைந்திருப்பது எமது மலையக மண்ணுக்கு மேலும் பெருமை சேர்ப்பதுடன், நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கின்றது.
மத்திய மாகாணத்தில் முதலாவது சப்ததள 108 அடி இராஜகோபுரம் உடைய பிள்ளையார் கோவிலாகவும் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயம் அமையப்பெற்றுள்ளது.
கதிர்காமம், நல்லூர், திருக்கேதீஸ்வரம், திருகோணேஸ்வரம் போன்ற புனித பூமிகளுக்கு பக்த அடியார்கள் ஆன்மீக பயணம் மேற்கொள்வதுபோல
