மதப்போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பிரசங்கம் செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 3 நாடுகளில் நடைபெறவுள்ள மத சொற்பொழிவுகளில்
பங்கேற்பதற்கு கோட்டை நீதவான் திலின கமகேவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.