கருப்பு சந்தைகளில் மதுபானம் விற்பனை..!

சட்டவிரோத மதுபான விற்பனைகள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மது வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தை இலக்கு வைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ள
போதிலும் கருப்பு சந்தைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply