இன்றைய வானிலை..!  

இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். 

மேல், மத்திய. சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின்  காரணமாக, இன்று(13) நண்பகல் 12.10 அளவில் குமுழமுனை, முறிகண்டி, கேரிதமடு மற்றும் தண்ணீரூற்று ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Social Share

Leave a Reply