தேர்தலினால் நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பிதமடையும்  சாத்தியம் 

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்ற போதும், 2024ம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான மாற்றங்களின் ஊடாக இலங்கையின் பொருளாதார மீட்சி ஸ்தம்பிதமடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. 

நிதிக் கொள்கைகளில் ஏற்படக்கூடிய தாக்கம் உட்பட எதிர்வரும் தேர்தல் தொடர்பான நிலையற்ற தன்மை இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கு தடையாக அமையலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வு கூறியுள்ளது. 

மேலும், இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பதில் தாமதம் ஏற்படுவதும் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply