ஒரே நாளில் இரு தேர்தல் சாத்தியமா?  

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இரண்டு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தேர்தல்களை நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

பாராளுமன்ற தேர்தலின் போது, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் வேறுப்பட்ட வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்பதுடன், ஜனாதிபதித் தேர்தலின் போது அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான வாக்குச்சீட்டு அச்சிடப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

மேலும், பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மறுப்பட்ட கூட்டணிகளை அமைக்கும். 

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலின் போது குறித்த வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்கும் அரசியல் கூட்டணி, பொதுத் தேர்தலில் போது பிரிவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply