பண்டாரவளையில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து -பலர் வைத்தியசாலையில்

பண்டாரவளை கஹகல்ல பகுதியில் வேனொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தியத்தலா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

குறித்த வேனில் பயணித்தோர் சுற்றுலா மேற்கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply