பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் இன்று (19) முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கும் அனுதாபம் தெரிவித்தார்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

தான் உயிரிழப்பதற்கு முன்னரே தனக்கான கல்லறையைப் பாலித தெவரப்பெரும அமைத்திருந்தார்.

இதன்படி அவரின் கோரிக்கைக்கமைய களுத்துறை – மத்துகம பகுதியில் பூதவுடல் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Social Share

Leave a Reply