சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு  முன்னால் அமைதியின்மை 

கொழும்பு  டி. பி. ஜயா மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. 

கட்சி தலைமை அலுவலகத்திற்குள் சிலர் நுழைய முற்பட்ட போது, பொலிஸார் அதற்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டு சில நிமிடங்களில் இவ்வாறு குழப்பநிலை ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டதக்கது. 

Social Share

Leave a Reply