இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு சஜித் இரங்கல்   

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச ஈரானின் பதில் ஜனாதிபதி மொஹமட் மொஹ்பார் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள தனது இரங்கல் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரான் ஜனாதிபதியின் பார்வை மற்றும் அறிவுத்திறன், தனது நாடு மற்றும் அதன் மக்கள் மீதான அவரது ஆழ்ந்த அன்பு மற்றும் அவர் தனது கடமைகளை நிறைவேற்றிய சிந்தனை முறை ஆகியவற்றால், அவர் ஏனைய தலைவர்களில் இருந்து வேறுப்பட்டவர் என எதிர்க்கட்சித் தலைவரின் இரங்கல் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஈரான் மக்கள் வரலாற்றில் பல்வேறு விடயங்களை சகித்துக்கொண்டாலும், இந்த தருணத்தில் ஈரானின் மதத் தலைவரின் உறுதியான தலைமை தேவைப்படும் எனவும் அவர் நாட்டிற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனவும் இரங்கல் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

இப்ராஹிம் ரைசி அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமையால், இலங்கை மக்கள் அவரது அரவணைப்பையும் பிரசன்னத்தையும் நேரடியாக அனுபவிக்க முடிந்தது எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர், மிகுந்த துக்கம் நிறைந்த இந்த காலகட்டத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரின் குடும்பத்தினர் மற்றும் ஈரான் மக்களுடன் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply