ஜேர்மனியில் நடைபெற்ற 2024ம் ஆண்டிற்கான Anhalt தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
யுபுன் அபேகோன் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிகாண் சுற்றில், 10.15 வினாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றதுடன் Anhalt தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்தின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் நேற்று(24.05) வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 10.16 செக்கன்களில் ஓட்டத்தை நிறைவு செய்த யுபுன் அபேகோன் தங்கம் வென்றார்.