தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் வயல் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த
இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலதென்ன மற்றும் ரம்பொட பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 29 வயதுடையவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளனர்.
குறித்த இருவரும் கடந்த 22ம் திகதி தங்கியிருந்த விடுதியிலிருந்து வௌியேறி மீண்டும் திரும்பாத நிலையில், விடுதியில் தங்கியிருந்த ஒருவர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.