நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – பதுளை மற்றும் பதுளை – கொழும்பு கோட்டை ஆகிய இரவு அஞ்சல் ரயில்களையும், இரண்டு இரவு நேர சிறப்பு ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்வே திணைக்களம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.
குறிப்பாக நாவலப்பிட்டியிலிருந்து பதுளை வரையான ரயில் பாதையில் மரங்கள் வீழ்ந்துள்ளதால் ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.