வெசாக் பௌர்ணமி தினமான கடந்த 23ம் திகதி எரிபொருள் விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காலத்திற்குப் பின்னர் வெசாக் பௌர்ணமி தினத்தன்று எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் எரிபொருளுக்கான தேவை அதிகரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.