மின்சார சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம்

இலங்கை மின்சார சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை அடுத்த வாரம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இதன்படி,இந்த விவாதம் அடுத்த மாதம் 06 ஆம் திகதி காலை 10.30 முதல் மாலை 05 மணி வரை நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply