ரேபிஸ் நோயற்ற வலயமாக அறிவிக்கப்பட்ட அனுராதபுர புனித பூமி 

அனுராதபுரம் புனித பூமி ரேபிஸ் நோயற்ற வலயமாக அனுராதபுரம் மாநகர சபை ஆணையாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்கள் ரேபிஸ் நோய் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என கால்நடை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

கடந்த நான்கு வருடங்களாக நடத்தப்பட்ட  ரேபிஸ் நோய் எதிர்ப்பு வேலைத்திட்டங்களின் ஊடாக அனுராதபுரம் மாநகர சபை எல்லைக்குள் ரேபிஸ் நோய் அபாயம் இல்லாதொழிக்கபட்டுள்ளதாக என அனுராதபுரம் மாநகர ஆணையாளர் ருவன் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து நான்கு வருடங்களாக உலக ரேபிஸ் தினத்தின் போது தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், 90% தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஏனைய பிரதேசங்களிலிருந்து விலங்குகளை அனுராதபுரத்திற்குள் கொண்டு வருவதில் பிரச்சினைகள் இருப்பதாகவும், ஆகவே அவ்வாறு நகருக்குள் கொண்டு வரப்படும் விலங்குகளை உரிமையாளர்கள் பொறுப்புடன் பராமரிக்குமாறு அனுராதபுரம் மாநகர சபை ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தடுப்பூசி செலுத்தப்படாத விலங்குகளுக்கு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ மனைகளினுடாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாளை(07.06) காலை 5 மணி முதல் அனுராதபுரம் புனித பூமி அமைந்துள்ள பிரதேசத்தில் சுற்றித் திரியும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply