டி20 உலகக்கிண்ணம்: ஓமானை வீழ்த்தியது ஸ்கொட்லாந்து அணி 

டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்கொட்லாந்து அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், அன்டிகாவில் இன்று(10.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  

அதன்படி, ஓமான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஓமான் அணி சார்பில் பிரதிக் அதவலே 54 ஓட்டங்களையும், அயான் கான் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார். ஸ்கொட்லாந்து அணி சார்பில் பந்து வீச்சில் சஃப்யான் ஷெரீப் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

151 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. ஸ்கொட்லாந்து அணி சார்பில் பிராண்டன் மெக்முல்லன் 61 ஓட்டங்களையும், ஜார்ஜ் முன்சி 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இதன்படி, இந்த போட்டியில் ஸ்கொட்லாந்து அணி  7 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் பிராண்டன் மெக்முல்லன் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply