மைத்திரிக்கு எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithiripala Sirisena) எதிரான வழக்கை ஒருதலைப்பட்சமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மைத்திரிபால ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்று (24.06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலையாகாமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரத் சந்திரவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply