ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பா கிண்ண காற்பந்தாட்ட போட்டி தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு சுவிற்சலாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
நேற்று(29.06) நடைபெற்ற சுவிற்சலாந்து மற்றும் இத்தாலி அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் சுவிற்சலாந்து அணி 2-0 என நடப்பு சம்பியன் அணியை வெற்றி பெற்று இத்தாலி அணியை வெளியேற்றியது. சுவிற்சலாந்து அணி சார்பாக பிரூலர் 35 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். வர்காஸ் இரண்டாம் பாதி ஆரம்பித்து முதலாவது நிமிடத்தில் கோலை பெற்றுக்கொண்டார். இதன் மூலம் சுவிற்சலாந்து அணி 2-.0 என பெற்றது.
ஜேர்மனி அணி டென்மார்க் அணியை 2-0 என வெற்றி பெற்றது. 53 ஆவது நிமிடத்தில் ஹவேர்ட்ஸ் முதலாவது கோலை ஜேர்மனி அணிக்கு அடித்தார். 68 ஆவது நிமிடத்தில் முசியால இரண்டாவது கோலை அடித்தார். இதன் மூலம் ஜேர்மனி அணியின் வெற்றி உறுதியானது.
இங்கிலாந்து மற்றும் ஸ்லோவோக்கியா அணிகளுக்கிடையிலான முன்னோடி காலிறுதிப் போட்டியும், ஸ்பெய்ன் ஜோர்ஜியா அணிகளுக்கிடையிலான போட்டி மற்றுமொரு காலிறுதிப் போட்டியாகவும் இன்று நடைபெறவுள்ளன.