2 மாதங்களாக நீடித்த வேலைநிறுத்தம் நிறைவுக்கு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் நேற்று(11.07) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் போராட்டத்தை கைவிடுவதற்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர். 

அதற்கமைய, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த வேலை நிறுத்த போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  

Social Share

Leave a Reply