கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என்றால் நாளை(16.07) முதல் மீண்டும் வேலைநிறுத்ததில் ஈடுபடவுள்ளனர்.
ரயில் நிலைய அதிபர்களின் கோரிக்கைகளை அமைச்சரவையில் சமர்ப்பித்து தீர்வுகளை வழங்குவதாக போக்குவரத்து அமைச்சர் வழங்கிய வாக்குறுதி இன்று(15.07) நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளைய(16.07) தினம் இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் பல மாத வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்து இன்று(15.07) முதல் பணிக்கு சமூகமளிக்க தீர்மானித்துள்ளனர்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தங்களுடைய போராட்டத்தை கைவிடுவதற்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.