வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முதற் கட்டமாக வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2025ம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியாருக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலை இலக்காக கொண்டு இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு நாட்டை இட்டுச் செல்ல முடியாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.