விஜயதாச ராஜபக்ஷ நீதியமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்று(29.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தான் போட்டியிடவில்லை எனவும், வேறு ஒரு கூட்டணியில் போட்டியிடவுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.