தேர்தலுக்காக 1.4 பில்லியன் கோரும் தபால் திணைக்களம்  

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் செலவினங்களுக்காக 1.4 பில்லியன் ரூபா தேவைப்படுவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க சிங்கள ஊடகமொன்று இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். 

சாதாரண தபால், பதிவுத் தபால், எழுது பொருட்கள், போக்குவரத்து, நிர்வாகக் கட்டணம் உள்ளிட்ட பல செலவினங்கள் இதனுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

தபால் திணைக்களத்தின் தேர்தலுக்கான செலவினங்கள் தொடர்பான மதிப்பீடு முன்னறிவிப்பு மாத்திரம் என்பதால், கோரப்பட்ட பணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply