மக்கள் போராட்டக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவான் போபகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
‘அரகலய’ மக்கள் போராட்டத்தின் செயற்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்ட மக்கள் போராட்டக் கூட்டணியின் சார்பில் எதிர்வரும் தேர்தலில் நுவான் போபகே போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(29.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.