களுத்துறை மாவட்ட கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

உத்தேசிக்கப்பட்டுள்ள களுத்துறை மாவட்ட கிரிக்கெட் மைதானத்திற்கான முதற்கட்ட நிர்மாணப் பணிகள் ஶ்ரீலங்கா கிரிக்கெட் “தேசிய அபிவிருத்தி பாதை” திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதனுடாக தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான திறமைகளை கொண்ட ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

களுத்துறை மாவட்ட கிரிக்கெட் மைதானத்திற்கான முதற்கட்ட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன், சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் ஹரின் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலின் கீழ், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் யோசனைக்கு அமைய, ஶ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாின் அழைப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் கடந்த 27ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

புதிய மைதானத்தின் நிர்மாணத்திற்கான அனைத்து செலவுகளையும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் ஏற்கவுள்ளது. 5 ஆடுகளங்களை கொண்டதாக நிர்மாணிக்கப்படும் இந்த மைதானத்தில், மாவட்ட மற்றும் படசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply