எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
போலி விளம்பரங்களினால் ஏமாறமல், தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவு செய்து குறித்த தகவல்களின்படி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்படும் விளம்பரங்கள் தொடர்பில் ஆணைக்குழு பொறுப்பேற்காது எனவும், குறித்த விளம்பரங்களில் உள்ள தகவல்கள் பொய்யானவை என்பதுடன் அவை மக்களை தவறாக வழி நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் எதிர்வரும் 5ம் திகதியுடன் நிறைவடைகின்றது.