இலங்கைக்காக களமிறங்கும் மொஹமட் ஷிராஸ்

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள இந்த போட்டி இலங்கை அணிக்கு முக்கிய போட்டியாக அமைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20த் தொடரில் இந்தியா அணி மூன்று போட்டிகளிலும் வெற்றயீட்டியிருந்தது. 

டி20த் தொடரின் இறுதிப் போட்டி இலங்கை அணிக்கு சாதகமாக காணப்பட்ட போதிலும், சூப்பர் ஓவர் வரை சென்று இலங்கை தோல்வியுற்றமை இரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என்பதே இரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் வேண்டுகோளாகவும் இருக்கிறது.  

இலங்கை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான டில்ஷான் மதுசங்க மற்றும் மதீஷ பத்திரன ஆகியோர் உபாதை காரணமாக தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், இலங்கை குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்ட மொஹமட் ஷிராஸ் இன்று(02.08) தனது முதலாவது போட்டியில் களமிறங்கவுள்ளார். 

இலங்கை அணி: சரித் அசலங்க, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, டுனித் வெல்லாளஹே, அகில தனஞ்சய, அசித்த பெர்னாண்டோ, மொஹமட் ஷிராஸ்

இந்தியா அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சிரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், மொஹமட் சிராஜ்

Social Share

Leave a Reply