கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Shalki எனும் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று(02.08) காலை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலிற்கு இலங்கை கடற்படையினரால் சம்பிரதாயபூர்வமாக வரவேற்பளிக்கப்பட்டது. 

64.4 மீட்டர் நீளமுடைய இந்திய நீர்மூழ்கிக் கப்பலில் 40 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்திய கப்பலின் கட்டளைத் தளபதிக்கும், இலங்கை மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையே உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் இன்று(02.08) கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் 4ம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.

Social Share

Leave a Reply