திருத்தப்பட்ட நிகழ்நிலை காப்புச்சட்டம் – வர்த்தமானியில் வெளியீடு

2024 ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவிற்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்புச் சட்டம் முதலில் 2023 செப்டம்பர் மாதத்தில் இலங்கை அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து நிகழ்நிலை காப்புச் சட்டமூல விதிகள் பல அரசியலமைப்புடன் ஒத்துப்போகவில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி உயர் நீதிமன்றின் தீர்மானத்திற்கமைய நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

இதற்கமைய அரசாங்கம் நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்அகொண்டு கடந்த மாதம் 31 ஆம் திகதி
வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிட்டது.

Social Share

Leave a Reply