ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 45 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலின் போது பொலிஸார் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மேற்கொண்ட தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுின் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
0767914696 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0112505566 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்.