வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாக மொட்டுக் கட்சி உறுதி

வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாக மொட்டுக் கட்சி உறுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள சுமந்திரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று (10.08) இடம்பெற்றுள்ளது.

இதன்போது வடக்கு கிழக்கில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கும் தாம் தயார் என சுமந்திரனிடம் நாமல் ராஜபக்ச தெரிவித்ததாக பொதுஜன பெரமுனவின் மத்திய குழுவில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் கலந்துகொண்டார்.

Social Share

Leave a Reply