சின்னத்தை அறிவித்த விஜயதாச ராஜபக்ச

சின்னத்தை அறிவித்த விஜயதாச ராஜபக்ச

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச கார் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அத்துருகிரியவிலுள்ள ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் இன்று (11.08) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் சின்னம் அறிவிக்கப்பட்டது.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் எவரும் கலந்து கொள்ளாத நிலையில் விஜயதாச ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவளிப்போர் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply