தேர்தலுக்கு நிதி தடையல்ல – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவது பிரச்சினையல்ல எனவும் அதற்காக நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று (11.08) கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவின மதிப்பீடுகள் 100 கோடி ரூபாயை தாண்டவில்லை. தேர்தலுக்காக 10 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அச்சிடுதல், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளைத் தவிர, அதிகாரிகளின் கொடுப்பனவுகள் போன்ற சில செலவுகள் உள்ளன. செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நிதி வழங்கப்படும்” என்றார்

Social Share

Leave a Reply