மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.