உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் என பொய்யான தகவல்களை கூறி வர்த்தகர்களிடமிருந்து சிலர் பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பணம் சேகரிக்கும் நபர்களிடம் பணத்தை வழங்க வேண்டாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இறைவரித் திணைக்களம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
இவ்வாறு அறவிடப்படும் பணத்திற்கு தாம் பொறுப்பல்ல என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், அருகில் உள்ள பிராந்திய அலுவலகம் அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு செல்வதனுடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளுமாறு இறைவரி ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.