இன்று(12.08) முதல் எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை வரை எதிர்ப்பு வாரத்தை முன்னெடுக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
இன்றும்(12.08), நாளையும்(13.08) கடமைகளில் ஈடுபடாமல் இருக்கவும் கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் தாம் முன்வைத்த பரிந்துரைகள் உள்ளடக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக கிராம உத்தியோகத்தர்கள் கூட்டமைப்பின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாக அமைச்சுக்கு முன்பாக இன்று(12.08) அமைதியான முறையில் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.