சிரியாவில் உள்ள ஹமா நகரிலிருந்து கிழக்கே 28 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 5.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சிரியாவின் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 3.7 ரிச்டர் அளவில் சிறியளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் தகவல் ன வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய நிலநடுக்க மையம் அறிவுறுத்தியுள்ளது.