மன்னாரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பாண் – மக்கள் விசனம்

மன்னாரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பாண் - மக்கள் விசனம்

மன்னாரில் மாத்திரம் சாதாரண பாண் றாத்தல் ஒன்றின் விலை 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மன்னார் அரசாங்க அதிபரிடம் மக்கள் முறைப்பாடளித்தனர்.

இந்நிலையில் நேற்று (12/08), மன்னார் மாவட்ட வெதுப்பக உரிமையாளர்களுடன், அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன், ஒரு கலந்துரையாடினார்.

இதன்போது, பாண் றாத்தல் ஒன்றின் விலையை 140 ரூபாவாக குறைப்பதற்கு வெதுப்பக உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்ததோடு, மன்னார் மாவட்டத்தில் இதுவரை காலமும் செயற்பாட்டில் இல்லாத வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இன்றிலிருந்து (13/08) மக்கள் அனைத்து வெதுப்பகங்களிலும் சாதாரண பாண் றாத்தல் ஒன்றினை 140 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விற்கப்பாடாவிடின் 023222235 என்னும் மாவட்டச்செயலகத்தின் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது நேரில், சென்று முறைப்பாடு செய்யமுடியுமென மக்களுக்கு அரசாங்க அதிபரினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply