பாராளுமன்றத்தில் இன்று (06.09.2021) அவசரகால சட்டத்தை அமுலாக்குவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாராளுமன்றம் இன்று கூடியது. இதன்போது அவசரகால சட்டத்தை அமுலாக்குவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஆதரவாக 132 வாக்குகளும், எதிராக 51 வாக்குகளும் வழங்கப்பட்டன. அதனடிப்படையில் 81 வாக்குகளால் அவசரகால சட்டத்துக்கான வாக்களிப்பு வெற்றியளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசிய சேவைகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை சீர் செய்யும் முகமாக இந்த அவசரகால சட்டம் அமுல் செய்யப்படுகிறது. அத்தியாவசிய உணவு விநியோகத்தை சீர் செய்வதே உடனடியாக நடைமுறைக்கு வரவுளள்து என எதிர்பார்க்கப்படுகிறது.