வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்
அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பலாங்கொடையில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
அரசாங்கத்தின் கீழ் நாடு எவ்வாறு அபிவிருத்தி செய்யப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாடு முற்றிலும் சிதைந்துவிட்டது. ஆனால், செப்டெம்பர் 21 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த நாட்டை படிப்படியாக அபிவிருத்தி செய்யத் தொடங்குவோம்
என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்”
நாங்கள் அதை எப்படி செய்வது? முதலில், அரசியல்வாதிக்கும் குடிமகனுக்கும் இடையிலான தொடர்பு வலுப்படுத்தப்பட வேண்டும். முதலில் எங்களுக்கு ஆதரவாக வாக்களிக்காத வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அரசியல் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவோம். அதற்கு முன்னுதாரணமாக இருப்போம்.
நீண்ட காலமாக குடும்பங்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் மீது கட்டமைக்கப்பட்ட அரசாங்கங்களால் நாங்கள் ஆளப்பட்டோம்.
இருப்பினும், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ், வேலைக்குத் தகுதியானவர்களுக்கு மாத்திரமே பதவிகளை வழங்குவோம்.
அரசியல் தொடர்புகள் அல்லது குடும்ப உறவுகளை நாங்கள் கருத்திற் கொள்ள மாட்டோம்,” என அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.