இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கன்னி தேர்தல் பிரச்சாரம் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இ.தொ.கா பொதுச் செயலாளரும்
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளதுள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனையொட்டி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க கடந்த 18 ஆம் திகதி இ.தொ.காவின் தேசிய சபை ஒன்றுகூடி ஏகமனதாக தீர்மானித்தது.
எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கன்னி தேர்தல் பிரசார நடவடிக்கைள் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
எமது நாட்டின் இக்கட்டான பொருளாதார நெருக்கடியில் நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதியை அதிகப்படியான வாக்குகள் மூலம் மீண்டும் வெற்றிபெற செய்வோம் நாங்கள் அனைவரும் ஒரணியாக திகழ்வோம்” என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.