போலி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளம் குறித்து அவசர எச்சரிக்கை

போலி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளம் குறித்து அவசர எச்சரிக்கை

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆணைக்குழுவில் வேலை வாய்ப்புகளை விளம்பரப்படுத்தும் போலி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இணையத்தளம் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

போலியான இணையதளம் இணைய மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போலி இணையதளங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய சின்னத்தையும் தேர்தல் ஆணைக்குழுவின் பெயரையும் பயன்படுத்தி இலங்கையர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளமையை அமெரிக்காவை தளமாகக் கொண்ட இணையத்தளமொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

சண்டே டைம்ஸின் கூற்றுப்படி, போலி வலைத்தளத்தை இயக்குபவர்களின் அடையாளத்தை கூகுள் எல்எல்சி இன்னும் வெளிப்படுத்தவில்லை என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

போலி இணையதளம் குறித்து தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்ததையடுத்து, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியவை இணைந்து மூன்று நாட்களுக்குள் கூகுள் டொமைனில் இருந்து தளத்தை அகற்றுவதற்கு திறம்பட செயல்பட்டதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply