பொதுத் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் – ஆணையாளர் நாயகம்

பொதுத் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் - ஆணையாளர் நாயகம்

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து 66 நாட்களுக்கு பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டை பொறுப்பேற்கும் ஜனாதிபதி தனக்கு பொருத்தமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லையென கருதும் பட்சத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு நடந்தால் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட்டு 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டியேற்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply