அஸ்வெசும, சம்பள உயர்வைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி முதுகில் குத்தக்கூடாது – ஜீவன்

அஸ்வெசும, சம்பள உயர்வைப் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி முதுகில் குத்தக்கூடாது - ஜீவன்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தோட்ட தொழிலளார்களுக்குப் பெற்றுத் தருவதாக கூறிய சம்பள அதிகரிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று (15.09) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ சஜித் பிரேதாசவிடம் சிறந்த தலைமைத்துவம் இல்லை. தோட்ட தொழிலாளர்களுக்கு 2500 சம்பள அதிகரிப்பு தருவதாகவும் சிறுதோட்ட உரிமையாளர் ஆக்குகிறேன் என்றும் பொய் சொல்கிறார்.

நாம் ஒருபோதும் மலையகத்தைப் பிரித்து ஆள வேண்டும் என்று நினைக்கவில்லை. இன்று ஜனாதிபதி தந்த அஸ்வெசும போன்ற திட்டங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர். அவரின் முதுகில் குத்தக்கூடாது. இன்று பலர் பிரதேச சபைகளை அமைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவே அதற்கும் வழி செய்திருந்தார் என்பதே உண்மையாகும்.

வாக்குச்சீட்டின் கீழ் இருந்து மூன்றாவது இடத்தில் ஜனாதிபதியின் சிலிண்டர் சின்னம் இருக்கும். அதற்கு வாக்களியுங்கள். கடந்த ஒரு வருடம் ஜனாதிபதியோடு பயணித்திருக்கிறோம். மக்கள் உரிமை சார்ந்த விடயங்கள் ஜனாதிபதி ரணில் ஆட்சியிலேயே அதிகளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.” என்றார்.

Social Share

Leave a Reply